பாருங்கள்

கேளுங்கள்

Powered by eSnips.com

Thursday 23 November 2006

4 ''ர்'' களும் இருப்பும்


தேர்-(பீரங்கிகள்,ஆகாய விமானங்கள் உட்பட)
போர்-(எல்லைப் போர்,தேசீய இன விடுதலை போர் உட்பட)
பேர்-(பேர் பெற்ற எழுத்தாளர்கள், தத்துவவாதிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட)
ர்-(விவசாயி மட்டுமே)
மனித இருப்பு இன்றைய காலகட்டத்தில்
இப்படியான அடுக்களில் இருக்கிறது.


ஆறு ஓடும் மண்ணில்-எங்கும்

நீர் ஓடும்

ஏர் ஓடும் எங்கும்-நம்

தேர் ஓடும்

போராடும் வேலையில்லை

யாரோடும் பேதமில்லை

ஊரோடும் சேர்ந்து

உண்ணலாம்......




அரச ஆட்சி அமைப்பில்
விவசாயிக்கு இருந்த
கொஞ்ச நஞ்ச மதிப்பு
நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ
சமூக அமைப்பில்
முற்றாக பறிக்கப்பட்டு விட்டது.




தேர் கொண்ட மன்னன் ஏது?
பேர் சொல்லும் புலவன் ஏது?
ஏர் கொண்ட உழவனின்றி
போர் செய்யும் வீரன் ஏது?


எல்லாமே-சாப்பாடு சமாச்சாரம் தான்.
பசி அடங்காத வரை
எந்த தத்துவம்தான் காதில் ஏறும்?
கண்ணில் தெரியும்?
.
சமமாய் பகிந்து உண்ணும்
பண்பு இந்த விவசாயியே
நமக்கு கற்று தருகிறான் இல்லையா?
அவன் புகழ் பாடும்
இந்த பாடல்
கன நாளாய்
என்தேடலில்...
உங்கள் ரசனைக்கும்!




powered by ODEO

No comments: